The State Mortgage and Investment Bank (SMIB) is one of the most established
financial institutions in Sri Lanka.
தலைவர்
M P குரகமா, வங்கி துறையின் அனைத்து பகுதிகளிலும் 32 வருடங்களுக்கு மேலான விரிவான மற்றும் வெவ்வேறு அனுபவங்களைக் கொண்ட மூத்த வங்கியாளராக உள்ளார். 2024 நவம்பரில் SMIB இன் தலைவராக நியமிக்கப்பட்டார், இவர் தலைமைத்துவம், திட்டமிடல் மற்றும் நிர்வாகத்தில் ஆழ்ந்த அறிவை இந்த பதவிக்கு கொண்டு வருகிறார்.
தனது வாழ்க்கையில் M P குரகமா பல்வேறு பங்குகளை வகித்துள்ளார், தனது பல்திறன்களையும் துறையின் ஆழ்ந்த அறிவையும் காட்டியுள்ளார். சம்பத் வங்கியில் முக்கியமாக பணியாற்றியுள்ளார், அங்கு அவர் நிர்வாக மேலாண்மை குழுவின் மற்றும் வங்கியின் தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் முக்கிய உறுப்பினராக இருந்துள்ளார். அவரது பங்களிப்புகள் வங்கியின் உத்திச் செல்நெறியை வடிவமைத்தல், புதுமைகளை ஊக்குவித்தல் மற்றும் செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப சிறப்பை உறுதி செய்தலில் முக்கிய பங்கு வகித்துள்ளார். அவரது அர்ப்பணிப்பு, வங்கித் துறையின் ஆழ்ந்த புரிதல் மற்றும் நேர்மை அவரை ஒரு நம்பகமான தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, அமைப்பு இலக்குகளை முன்னெடுப்பதிலும் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் அர்ப்பணிப்புடன் உள்ளார்.
M P குரகமா இலங்கை வங்கிகள் நிறுவனத்தின் (IBSL) கூட்டு உறுப்பினரும், ஹார்வர்ட் வணிகப் பள்ளியின் முன்னாள் மாணவரும் ஆவார். இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பல வளர்ச்சி திட்டங்களில் பங்கேற்றுள்ளார், அதில் பிரபலமான சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திலும் பங்கேற்றுள்ளார்.
நிர்வாகமற்ற சுயாதீன இயக்குநர்
இவர் கொழும்பு பல்கலைகழகத்தில் LL.B பட்டம் பெற்ற, 29 தொழிழ் துறை அனுபவத்தினை உடைய சட்டதரணி ஆவார். மேலும் வணிக சட்டம், நிறுவனம் சார் சட்டங்கள், நிலச் சட்டம் மற்றும் தொழிலாளர் சட்டம் போன்றவற்றில் நிபுணத்துவத்தினை கொண்டிருப்பதுடன். மாவட்ட நீதிமன்றங்கள், வணிக உயர் நீதிமன்றம், சிவில் மேல்முறையீட்டு உயர் நீதிமன்றம் மற்றும் தொழிலாளர் தீர்ப்பாயங்கள் ஆகியவற்றில் பயிற்சி பெற்றுள்ளார்.
மேலும், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகிய இரண்டிலும் ரிட் விண்ணப்பம், நிர்வாக சட்டம் மற்றும் அடிப்படை வழக்கு தொடர்பிலான வழக்குகளை கையாள்வதி திறம்பெற்றவராவார்.
நிர்வாகமற்ற, முன்னால் அலுவலக இயக்குநர்
இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் முது முகாமைத்துவத்தில் முதுகலை பட்டம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தன பல்கலைகழகத்தில் பொது நிர்வாகத்தில் BSc பட்டம் பெற்ற அவர், இலங்கையின் கணக்கியல் துறையில் 30+ வருட அனுபவத்தை கொண்டுள்ளார்.
கணக்கியல் தொழிநுட்ப வல்லுநர் சங்கத்தின் உறுப்பினர், பொது நிதி கணக்காளர்களுடனான கூட்டுறவு, சான்றளிக்கப்பட்ட வணிக கணக்காளர் மற்றும் பட்டய பொது நிதி முகாமை கணக்காளர் ஆகிய சான்றுகளை தன்னகத்தே கொண்டுள்ளார். மேலும் Chartered Institute of Public Finance & Accountancy நிறுவகத்தில் அங்கத்தவத்தினை கொண்டிருப்பதுடன் அவர் பொது நி மேலாண்மை மற்றும் கஜானா, கடன் முகாமைத்துவம், தணிக்கை, கணக்கியல் மற்றும் பொது கொள்முதல் ஆகியவற்றில் நிபுணராக திகழ்கின்றார்.
நிர்வாகமற்ற சுயாதீன இயக்குநர்
வணிக முகாமைத்துவத்தில் KEISEI சர்வதேச பல்கலைகழகம் மற்றும் சந்தைப்படுத்தலில் வயம்ப பல்கலைகழகம் ஆகியவற்றில் இரண்டு Ph.D. பட்டங்களை கொண்டுள்ளதுடன். இவை தாண்டி இந்திரா காந்தி தேசிய திறந்த பல்கலைகழகத்தில் நிதி முகாமைத்துவத்தில் MBA பட்டத்தினை கொண்டுள்ளதுடன் வயம்ப பல்கலைகழகத்தில் பொது MBA பட்டத்துடன் தனது நிபுணத்துவத்தினை விரிவுபடுத்தியுள்ளார்.
நிர்வாகமற்ற சுயாதீன இயக்குநர்
அவுஸ்திரேலியா, அடிலெயிடில் அமைந்துள்ள Australian Institute of Business இல் வணிக முகாமைத்துவத்தில் MBA மற்றும் முதுகலை பட்டத்துடன் தனது கல்விப் பயணத்தைத் தொடங்கினார். அவரின் தொழில்சார் வளர்ச்சிக்கான தேடாலானது பட்டய நிபுணத்துவ முகாமையாளர்களில் ஒருவராகவும் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தின் சான்றளிக்கப்பட்ட அங்கத்தவராகவும் இயைய உந்துதலளித்தது.
மேலும் அவரது தகைமைகளை உயர்த்தும் வகையில், Chartered Management Institute மற்றும் the Association of Business Executive ஆகிய இரு நிறுவனங்களிலும் சக அங்கத்தவராக உள்ளார். இதற்கு மேலாக Chartered Institute of Marketing மற்றும் Institute of Management ஆகியவற்றிலும் தனது அங்கத்துவத்தை உறுதி செய்துள்ளார். 30 வருடங்களுக்கும் மேலான மூத்த நிர்வாக அனுபவத்துடன், அவரது தொழிழ் தலைமைத்துவம், சிறப்புத் தேர்ச்சி மற்றும் வணிகத் துறையில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பானவை அவரின் துறை ச்ஈடுபாட்டினை உரக்கச் சொல்கிறது.
எம்மிடமிருந்தான புதிய தகவல்கள், நிறுவனம் சார் செய்திகள் மற்றும் வர்த்தமானி அறிவிப்புகள் போன்றவற்றை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இப்போதே எம்மை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்