The State Mortgage and Investment Bank (SMIB) is one of the most established
financial institutions in Sri Lanka.
அரச ஈட்டு முதலீட்டு வங்கியானது இலங்கையின் உரிமம் பெற்று செயற்படும் நம் நாட்டு பிரஜைகளின் வீட்டு நிதி முதல் தனிப்பட்ட வணிக மற்றும் வங்கி தேவைகளாகிய பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்வதன் நிமித்தம் நிறுவப்பட்ட ஒரு விஷேட நிதி நிறுவனம் ஆகும். காலங்காலமாக நிலைநாட்டிய அகன்ற வணிக நிபுணத்துவத்துடன் வாடிக்கையாளர்களின் மெய் தேவைகளை முன்னின்று தீர்க்கும் நிறுவனம் என்ற வகையில் SMIB ஆனது நம்பகத்தன்மையுடன் கூடிய கூட்டாளராக தனது விழுதுகளை வியாபித்து வேரூற்றி நிலைத்து நிற்கின்றது.
SMIB வங்கியானது 1931 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க கட்டளை சட்டத்தின் கீழ், 1931 டிசம்பர் 6 ஆம் திகதி சிலோன் அரச ஈட்டு வங்கி (CSMB)எனும் பெயரோடு தன் முதல் விழுதினை வேரூற்றியது. பின்னர் 1943 இல் தாபிக்கப்பட்ட சிலோன் அரச ஈட்டு வங்கி மற்றும் விவசாய கைத்தொழில் கடன் கூட்டுத்தாபனங்களை ஒன்றிணைத்து 1975 ஆம் ஆண்டில் 1975 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கிச் சட்டத்துடன் விஸ்தரிக்கப்பட்டது.
1979 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி தன் ராஜகாரியங்களை இனிதே தொடங்கிய SMIB, 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் அங்கீகாரத்துடன் – உரிமம் பெற்ற விஷேட வங்கியாக அங்கீகரிக்கப்பட்டது.
நுகர்வோர் நிதி சந்தையில் தன்னிகரற்ற தலைவனாய் தேசத்தின் மேன்மையான அபிவிருத்தி வங்கி பங்காளராக திகழ்தல்.
SMIB தேசத்தின் முதன்மையான வீட்டு வசதி வங்கியாகவும், அபிவிருத்தி சார் வங்கித் துறையில் மேன்மையான பங்காளராகவும் தொடர்ந்தும் இயங்கும்.
வாடிக்கையாளர்
உயர்தர வாடிக்கையாளர் சேவை, தரம், புத்தாக்கம் மற்றும் அதிநவீன தொழிநுட்பங்களின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் வீட்டு வசதி மற்றும் அபிவிருத்தி நிதித்தேவைகளுக்கு வாகான முறையில் கவர்ச்சிகரமான தீர்வுகளை வழங்க நாம் தலையாய கடமைப்பட்டுள்ளோம்.
வணிக பங்காளர்கள்
அசைக்க முடியாத பாதுகாப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மையுடன் முன்வைக்கப்படும் முதலீடுகளுக்கான சிறந்த வருமானத்தை வழங்குவோம்.
ஊழியர்
எமது ஊழியர்கள் அவர்களது முழு திறனை வளர்ப்பதற்கும் மற்றும் வெளிப்படுத்தவும் அரோக்கியமான பணிச்சூழலை வளப்படுத்துவதனூடாக அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நாம் முழு வீச்சுடன் செயற்படுவோம்.
பங்குதாரர்கள்
பங்குதாரரின் வாஞ்சைகளை பாதுகாப்பதுடன் லாபகரமான வளர்ச்சியின் மூலம் பங்குதாரர்களின் மதிப்பை அதிகரிக்க நாம் திடசங்கட்பம் பூண்டுள்ளோம்.
தொழிநுட்பம்
விவேகம், தரம் மற்றும் வசதிகளுக்காக தானியங்கி மற்றும் தொழிநுட்ப செயலிகளினூடாக வெளியக வாடிக்கையாளர்களுக்காக மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.
சமூகம்
தேசிய அபிவிருத்தியின் ஒரு அங்கமாக திகழ்வதால், நாம் நமது சமூகத்தின் வாழ்க்கை முறையை மேம்படுத்த பணிகளை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை அறிந்திருக்கின்றோம்.
SMIB தேசத்தின் முதன்மையான வீட்டு வசதி வங்கியாகவும், அபிவிருத்தி சார் வங்கித் துறையில் மேன்மையான பங்காளராகவும் தொடர்ந்தும் இயங்கும்.
நாணயத்துடன் செயற்படுவதுடன் மரியாதையை வெளிப்படுத்துகின்றோம்.
நாம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் தொழில்முறையுடனும் மேம்படவும் கையாள்கின்றோம்.
எமது செயற்பாடுகளுக்காக நாம் ஏகமனதோடு பொறுப்பேற்பதுடன் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்.
குழுச்செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மையுடன் ஈடுபடுகின்றோம்.
புதுமையான யோசனைகளையும் செயல் உந்துதலை ஏற்படுத்தும் தீர்வுகளையும் நாடுகின்றோம்.
கற்றலுக்கான வேட்கையையும் வங்கியுடன் இயைந்து தூறைசார் வளர்ச்சிக்கான ஆர்வத்தையும் கொண்டிருக்கின்றோம்.
எம்மிடமிருந்தான புதிய தகவல்கள், நிறுவனம் சார் செய்திகள் மற்றும் வர்த்தமானி அறிவிப்புகள் போன்றவற்றை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இப்போதே எம்மை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்