S M I B

The State Mortgage and Investment Bank (SMIB) is one of the most established
financial institutions in Sri Lanka.

 திங்கட்கிழமை - வெள்ளி : 8:30am – 3:30pm 

 1922 

 info@smib.lk 

 En  |  සිං

தனிநபர் வணிகம் மற்றும் பெருநிறுவன தொழில் முனைவோர்கள் தமது வணிகங்களை விஸ்தரிக்கவும் அபிவிருத்தி செய்யவும் விஷேடமாக வடிவமைக்கப்பட்ட திட்டமாகும். தனிநபர் மற்றும் பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்கான வணிக அபிவிருத்திக் கடன்கள். ( நுண், சிறிய, நடுத்தர மற்றும் பெருநிறுவன தொழில் முனைவோர்)

அறிமுகம்

இந்த சேவையானது நுண்,சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களை ஆதரிப்பதற்கு உதவுவதுடன் அவர்களின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றுகின்றது. தற்போதைய சந்தை போக்குகளுக்கேற்ப நிதி தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக இலங்கை மத்திய வங்கியினால் கொண்டுவரப்பட்ட 2021 ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க அத்தியாவசிய பண கட்டளை சட்டத்தின் அடிப்படையில் இந்த வசதி வங்கிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நோக்கம்

இந்த சேவையானது நனிநபர் மற்றும் பெருவணிக தொழில் முனைவோறுக்காக ( குறைந்த பட்சம் ஒரு வருடம் துறையில் இருப்பவர்கள் ) தமது வணிகத்தை முன்னெடுத்து செல்ல அல்லது அபிவிருத்திசெய்ய நிதியளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது


தகைமை

  • விவசாயம், சிறுதொழில் மற்றும் கீழ்வரும் துறை/ துணைதுறைகளில் தற்போது ஈடுபட்டுள்ள தனிநபர்கள், சொத்துரிமையாளர்கள், பங்குடைமை அல்லது வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள்.
  • விண்ணப்பதாரி 18 வயதிற்கு மேற்பட்டிருப்பதுடன் தனக்கு சொந்தமான வளாகத்தில் அல்லது வாடகை/குத்தகைக்கு இடப்பட்ட வளாகத்தில் வணிக நிறுவனத்தை கொண்டிருத்தல் அவசியமாகும். மேலும் வங்கியுடன் உடன்படிக்கைகளை கைச்சாத்திட தகுதி பூண்டிருக்க வேண்டும்.
  • விண்ணப்பம் முன்மொழியப்பட்ட குறித்த வணிக நிறுவனமானது அதே பங்குதாரருக்கோ, நிர்வகிக்கும் இயக்குநர்களுக்கோ சொந்தமான துணை நிறுவனமாக இருக்கும் போது, புதிய வணிகம்/ தொடக்க திட்டங்கள் இத்தியாதிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெருகின்றன. மேலும் குழு நிறுவனமானது குறைந்தது மூன்று ஆண்டுகளேனும் செயட்பட்டிருக்க வேண்டும்.



திருப்பி செலுத்தும் வழிமுறை

குறித்த கடன் காலத்திற்குள் கடனினை பெற்ற நபர் தனது SMIB சேமிப்பு கணக்கினூடாக தான் பெற்ற மூலதனத்தை கடனும் வட்டியுமாக மாதாந்தோறும் செலுத்த வேண்டும். மாதாந்திர தவணை கட்டணத்தினை வணிகத்தின் பணப்புலக்கத்தின் அடிப்படையில் வகுக்க முடியும்.

  • சமப்படுத்தபட்ட மாதாந்திர தவணைகட்டணம்(EMI)
  • காலாண்டு தவணை
  • அரையாண்டு தவணை
  • வட்டி மாதாந்திரம் செலுத்தப்படும் மற்றும் மூலதனம் குறித்த கால முடிவில் மொத்தமாக திருப்பி செலுத்தப்படும்.

உதாரணமாக விவசாயம், உற்பத்தி, கட்டுமானம், நிலையான சொத்துக்களை கொள்முதல் செய்தல், செயல்பாட்டு மூலதன வசதிகள் போன்ற கடன்களுக்கு EMI/ காலாண்டு / அரையாண்டு போன்ற முறைகளில் பணத்தினை செலுத்த முடியும். மேலும் bullet மீள் செலுத்தல் முறை அபிவிருத்திக் கடன் போன்றவற்றிற்கு பொருந்தும். இவை மாதாந்தம் வட்டி மாத்திரம் செலுத்தப்பட குறித்த கால முடிவில் மூலதனம் முழுதாக செலுத்துதல் எனும் வகையில் செயற்படும்.

நிபந்தனைகளுக்குட்பட்டது

மேலதிக தகவல்களுக்கு, அருகிலுள்ள SMIB கிளையைப் பார்வையிடவும் அல்லது 1922 எனும் இலக்கத்தின் மூலம் எமது வாடிக்கையாளர் மைய்யத்தினை தொடர்பு கொள்ளுங்கள்.

கடன் கல்குலேட்டர்

மேலும் படிக்க  

சேமிப்பு வைப்பு விகிதங்கள்

மேலும் படிக்க 

விண்ணப்பங்கள் & படிவங்கள்

மேலும் படிக்க 



கருத்து தெரிவிக்கவும்

கீழே உள்ள படிவத்தில் உங்கள் விவரங்கள் மற்றும் ஏதேனும் கருத்துகள் அல்லது விசாரணைகளை தெரிவிக்கவும். எங்கள் கவனமுள்ள குழு உங்கள் செய்தியை மதிப்பாய்வு செய்து விரைவில் உங்களுக்கு உதவும்.

தொடர்புடைய சேவைகள்

விஷேட கடன் திட்டங்கள்

ஒரு வணிகத்தை நிறுவ அல்லது ஏற்கனவே இயங்கும் வணிகத்தை விரிவுபடுத்த நிதி தீர்வுகளை வழங்கவும், நுண்,சிறு, நடுத்தர வணிகங்களுக்கான விஷேட கடன் வசதி.

மேலும் படிக்க  

How Can We Help

விகிதங்கள் & கட்டணங்கள்

சேமிப்பு வைப்பு விகிதங்கள்

 

Visit Us In

இலக்கம் 269, காலி வீதி, கொழும்பு 03, இலங்கை.

Call Us To

பொது சேவைகள்: 011-7722722-3

தொலைநகல்/தொலைபேசி: 011-2575031

புதிய தகவல்களுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள்

எம்மிடமிருந்தான புதிய தகவல்கள், நிறுவனம் சார் செய்திகள் மற்றும் வர்த்தமானி அறிவிப்புகள் போன்றவற்றை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இப்போதே எம்மை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்